Tuesday, November 15, 2011

காதல் இனிப்பது ஏன் ???



"அவள்"


காதல் இனிக்கும்.......................!!!

நானும் அவளும் ஒரே இடத்தில்....
சுவாசித்தேன்... சுவாசித்தேன்... சுவாசித்தேன்... அவள் சுவாசக்காற்றாவது என்னுள் வராதா என்று

அவள் விழி என்னிலே....
பார்த்தேன்... பார்த்தேன்... பார்த்தேன்... அவள் பார்வையாவது என்னை புனிதமாக்காதா  என்று

அவள் விரல் குவியலில் என் விரல்கள்....
சிலிர்த்தேன்... சிலிர்த்தேன்... சிலிர்த்தேன்... அவள் கர்ப்பபையில் தானே நான் வளர்ந்தேன் என்று
.
.
.
.
.
நானும் அவளும் ஒரே இடத்தில்                 - அரசு மருத்துவமனை கட்டில்
அவள் விழி என்னிலே                              - நடை பழகும் வண்டியில் நான்
அவள் விரல் குவியலில் என் விரல்கள்       - பள்ளிகூடத்தின் முதல் நாள்
.
.
.
அவள் - அம்மா